மசூதியின் பெயர் : மஜிரே காமின்
அமைந்திருக்கும் இடம் : பழைய வண்ணாரப்பேட்டை, சின்ன மார்கெட், மொட்டை தோட்டம் தெரு..
இந்தப் பகுதி அனைத்துத் தரப்பு மதத்தினருக்கும் மிகவும் பழகிய ஒரு இடம். வடசென்னையைச் சுற்றியுள்ள மிக முக்கியமான பகுதியான வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொண்டிதோப்பு , மண்ணடி, மூலகொத்தளம் , பென்சில் பேக்டரி , லாலா குண்டா போன்ற இடங்களில் இறந்தவரகள் அதிகப்படியாக இங்கு தான் அடக்கம் செய்யப்படுகின்றன அதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் அறியப்பட்ட ஒரு இடமாக இந்த மசூதி இருக்கின்றது. .
சுமார் 64 வருட பழமையான மசூதி கட்டடம் இது. 9 ஆண்டுகளுக்கு முன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
கடந்தசுமார் ஆறு ஆண்டுகளாக சுமார் 20 ஆதரவற்றோர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.