“ஃபஜ்ரு” அல்லது “சுப்ஹூ” அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் தொழுவார்கள்.
“லுஹர்” டைம் என்பது கிட்டத்தட்ட 1 மணி சுமார் அல்லது 1.30 சொல்வார்கள்.
அதன் பிறகு “அஸர்” என்பது 3.30 பிறகு 4 அல்லது 4.30 க்கு தொழுவார்கள்.
“மக்ரிப்” என்பது சூரியன் அஸ்தமிக்கும் நேரம்,
“இஷா” என்பது அதைவிடக் கொஞ்சம் தள்ளி இரவுடைய பின்னால் இந்த 5 நேரங்களில் தொழுவார்கள்.
தொழுவது எதற்கு ?
தொழுவது எதற்கு என்ற கேள்வி இருக்கும்
, முன்னாடி ஒன்றுமே இல்லையே. முன்னாடி ஏதாவது இருந்தால் தான், ஒரு ஈடுபாடு இருக்கும். ஒன்றுமே இல்லாமல் சுற்றி வெறும் சுவராக இருக்கிறது, நீங்கள் எப்படி வழிபடுகிறீர்கள் என்றால், 1500 ஆண்டுகாலமாக உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் அப்படித்தான் வழிபடுகிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், அந்த நம்பிக்கை மனதில் வந்து சேரும் போது, முன்னால் உருவம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உருவத்தை பார்த்துதான் பயப்பட வேண்டும் என்றால் எல்லா இடத்திலும் உருவத்தை கையிலே வைத்திருக்க முடியாது.
கடவுள் ஒருவன் இருக்கிறான் அவன் நம்மைப் படைத்துவிட்டான். அவன் நம்மை நன்மைகள் செய்ய சொல்லியிருக்கிறான், தீமைகளை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டுமென்று கட்டளை போட்டிருக்கிறான்.
அவன் நம்மை 24 மணி நேரமும் ஃபாலோ பண்றான். இது இஸ்லாத்தில் வலியுறுத்தக்கூடிய காரியம். எப்போது நீங்கள் குற்றங்கள் செய்தாலும், போலீஸிலிருந்து தப்பிக்கலாம், நீதிமன்றத்திலிருந்து தப்பிக்கலாம், அரசாங்கத்திடமிருந்து தப்பிக்கலாம். நண்பர்கள், தாய் தந்தைகளிடமிருந்து தப்பிக்கலாம். ஆனால் கடவுளிடமிருந்து தப்பிக்க முடியாது. ஏனென்றால் அவன் தான் நம்மை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறான். அதனால் நம் மனத்தினுள் இருந்தால் போதும், அதனால் முன்னால் ஒரு உருவம் தேவைப்படாமல் போய்விடும்.
அதனால் உலக முஸ்லிம்கள் எல்லாரும் முன்னால் உருவம் எதும் இல்லாமல் வழிபட்டுக்கொண்டு, ஓதுவார்கள், நமாஸ் படிக்கும் போது சும்மா இருக்க மாட்டார்கள் ஏதாவது ஓதுவார்கள். அந்த ஓதுவதன் பொருள் தெரியும் போது மனம் உருகும். சில பேர் கண்ணீர் விடுவார்கள், அதனால் அவர்களுக்கு மன உருக்கம் ஏற்படும்.
அது மட்டுமல்ல ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழுகைக்கு முன்னால் கை, கால் சுத்தம் செய்ய வேண்டும். சும்மா அப்படியே போய் தொழுகை செய்ய முடியாது. அதைவிட சிறுநீர், மலம் கழித்து விட்டுத் தான் தொழ வேண்டும் எந்த நேரமாக இருந்தாலும் சரி.. ஏனென்றால் ஆடைகளிலோ அல்லது கைகளிலோ எந்த அசுத்தம் பட்டிருந்தால், தொழ கூடாது. அதிலும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும், உடல் தூய்மையாக இருக்க வேண்டும், ஆடை தூய்மையாக இருக்கவேண்டும் அந்த தூய்மையோடுதான் தொழுகையை நிறைவேற்ற முடியும்.
சிர வணக்கம்
அதன் பிறகு கைகால்களை சுத்தப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி, இறைவனுக்காக இந்த நேரத்திலே,——– குனிகிறான் குனிந்தால் உடற்பயிற்சி, நிமிருவான் எல்லாவற்றிற்கும் மேலாக, நெற்றி, மூக்கு, இரண்டு கை, இரண்டு முழங்கால், கால் பாதங்கள் இரண்டும் பூமியில் படுகின்ற மாதிரி சிரம் தாழ்த்துகின்ற மாதிரி இருக்கும் இதை “சிர வணக்கம்” என்று சொல்வார்கள். “சஜ்தா” என்று சொல்வோம். இதில் உங்களுடைய உடல் உறுப்புகள் எல்லாமே இயங்கும், இப்படிப்பட்ட பயிற்சியும் உங்களுக்கு கிடைக்கும்.
எல்லாவற்றையும் விட தொழுகையை முடித்து விட்டு, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பி விட்டு, இறைவனிடத்தில் தன்னுடைய கோரிக்கையை வைத்தால், ஏனென்றால் அவன் தான் என்னுடைய தேவையை நன்கு அறிந்தவன். எனக்கு என்ன வேண்டும், ஏது வேண்டும் நான் என்ன சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன் வாழ்க்கையில், இந்த எல்லாவற்றையும் யார் முன்னாடி போய் இறக்கி வைக்காவிட்டாலும், கடவுளுக்கு முன்னால் இறக்கி வைத்துவிடுவான். இறக்கி வைத்து விட்டு இப்படிப்பட்ட சிக்கலில் நான் மாட்டிக்கொண்டு இருக்கிறேன், என்னைக் காப்பாற்று, எனக்கு ஒரு தீர்வைச்சொல்லு, எனக்கு ஒரு வழியைக் காட்டு என்று இறைவனிடத்தில் கேட்கும்போது, மனத்தில் இருக்கின்ற பாரம் அப்படியே குறையும்.
பொதுவாகவே நீங்கள் பார்த்தீர்கள் என்றால் வாழ்க்கையில் மனதில் சில சிக்கல்களை போட்டு, போட்டு மூடி வைத்து வெளியில் சொல்லாமல் வத்திருந்தால், அது எங்கேயோ போய் முடிந்துவிடும்.