Home வட்டார வழக்குச் சொற்கள் புழகத்தில் உள்ள அரபும் – தமிழ் சொல்லும்

புழகத்தில் உள்ள அரபும் – தமிழ் சொல்லும்

by admin
0 comment

இப்போது உங்களுக்கு முன்னால் முஸ்லீம்களுக்கும் மத்தியில் இருக்கக் கூடிய தமிழ் வழக்குச் சொற்கள் இருக்கிறதே அந்த சில சொற்களை நான் உங்களுக்கு பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

அதிலும் குறிப்பாக மதுரை, நெல்லை ஏரியாக்களை பொருத்தமட்டிலே இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அது முழுக்க முழுக்க அரபு சொல்லாகவோ அல்லது உருதாகவோ இருக்கும். அவர்கள் பேசி பேசி பழகி பழகி அதுவே ஒருதமிழ் சொல்லாக மாறிவிட்டது என்றுகூட சொல்லலாம். அதை அகர வரிசைப்படியே நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

அலாமத்

சில பகுதிகளிலே சண்டை சச்சரவு செய்வதற்கு அலாமத் என்பார்கள். அலாமத் என்ற வார்த்தை அரபி, முழுக்க சுத்தமான அரபி, அதில் அலாமத் என்பது அல்லுமத் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. அல்லுமத் என்றால் நான் தான் பெரியவன். எனக்கு ரொம்பவும் செல்வாக்கு இருக்கிறது என்று ஒருவன் தன்னை கருதிக் கொள்வது. அப்போதுதான் சண்டையே வரும். அதனால் அவர்கள் அல்லுமத் என்ற வார்த்தையை அலாமத் என்று ஆக்கி அரபியிலே அதை சண்டை சச்சரவுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திருநெல்வேலி ஏரியாவில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டால் என்னடா அலாமத் பண்ற என்பார்கள். அலாமத் என்றால் அவர்களுக்குத்தான் தெரியும். என்னப்பா சண்ட போட்டுட்டு இருக்கிங்க என்பதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அஜாஹிப்

அதே மாதிரி இன்னொரு வார்த்தை இருக்கு அஜாஹிப் என்பது அஜீஹிப் என்ற அரபுச் சொல்லிலிருந்து வந்த மறுவல். இதை அவர்கள் ஆச்சர்யம் என்பதை காட்டுவதற்காக வேண்டி அரபிலே சொல்வதுண்டு. அதே அர்த்தத்திலே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சாதாரணமாக முஸ்லீம்கள் பேசிக்கொண்டிருக்கும் போது “என்னப்பா நீ சொல்றதா பாத்தா அஜாஹிப்பா இருக்கு” என்பார்கள்.

ஆனம்

அதே மாதிரி இன்னொரு வார்த்தையைச் சொல்லலாம் ஆனம். ஆனம் என்ற சொல்லிற்கு குழம்பு என்று அர்த்தம். ஆனம் என்ற சொல் இன்றைக்கு தமிழ் அகராதியில் இருப்பதை என்னால் காட்ட முடியும். தூய தமிழ் அது. ஆனால் பெரும்பாலும் இன்னைக்கு முஸ்லீம்கள்தான் பயன்படுத்துகிறார்கள். எங்கள் ஊரான திண்டுக்கல் பகுதியில் ”ஆனத்தை எடுத்துட்டு வா” என்று சொல்வார்கள். ஆனம் என்றால் குழம்பு. இது மறுவல் அல்ல தூயத்தமிழ். நான் எதற்கு இதை சொல்கிறேன் என்றால் முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

ஏனம்

அதே மாதிரி ஏனம் என்பார்கள். ஏனம் என்றால் பாத்திரம் என்று அர்த்தம். இது அரபியிலிருந்து வந்தது. அரபியில் இனாம் என்பார்கள் இது சொல் வழக்கில் மறுவி ஏனம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

காலாகத்

அதே மாதிரி கலகம் பண்றது என்பார்கள். இதற்கு காலாகத் என்பார்கள் எங்கள் ஊரில். இது அரபி மொழியில் கலாக் என்று சொல்வார்கள். கலாக் என்றால் அடிதடி படுதல், இது திண்டுக்கல் மற்றும் மதுரை பகுதியில் பயன்படுத்துவார்கள். இன்னொரு சொல்லைக் கூட சொல்லலாம் சாப்பிடுவதற்கு  தொட்டுக்க வைப்பார்களே வஞ்சரம்னு சிலர் சொல்வார்கள். இதை கரஉண்ணி என்பார்கள். ஏனென்றால் கரத்தில் வைத்திருக்க்க்கூடிய உண்ணி, கிராமத்தில் பழைய கஞ்சி குடிக்கும் போதும் வெங்காயத்தை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். இப்பொழுது சாதம், காய்கறி என எல்லாவற்றையும் இதேபோல் சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது.

சாயா

அதேபோல ”சாயா”, எங்கள் கிராமங்களில் என்னப்பா சாய குடிச்சிட்டியா என்று கேட்பார்கள். ஷாய் என்பது அரபு மொழி. அரபு மொழியில் ஷாய் என்றால் தேநீர் தான். அதே பேச்சு வழக்கில் ஷாயா என்று மாறிவிட்டது. இது அரபியிலும் இருக்கு உருது மொழியிலும் ஷாய் என்றுதான் சொல்வார்கள்.. ”ஷாயா பீயோ” தேநீர் சாப்டுங்க என்று சொல்வார்கள். இன்னொரு அருமையான வார்த்தை முஸ்லீம்கள் பயன்படுத்துகிறார்கள். பசியை தீர்ப்பதற்கு பசியாறல் என்பார்கள். பசியாத்தீட்டியா பா காலைல, இது பசியை ஆற்றுதல், பசியை தீர்த்துக்கொள்ளுதல் என்று அர்த்தம்.

மொஹல்லம்

அதற்கு பிறகு ”மொஹல்லம்” என்பார்கள் தெருவிற்கு. இந்த வார்த்தை அரபியில் மஹல்லத். மஹல்லத் என்றால் தெரு, ஏரியா, பகுதி என்று அர்த்தம். இது மறுவி மொஹல்லா என்றானது.

மேனத்

மேலும் தேனி மற்றும் திண்டுக்கல்லில் ”மேனத்” என்பார்கள். மேனத் என்றால் சிறந்தது, நல்லது என்று அர்த்தம். “ ஏம்மா நீ இந்த வியாபாரத்தை விட்டுட்டு இதை பார்ப்பது மேனத் என்பார்கள்.  இதற்கான அரபிய வார்த்தை மகூனத். மகூனத் என்பது மறுவி மேனத் என்று சொல்லப்படுகிறது.

தலாக்

மணவிலக்கு, டைவர்ஸ் அல்லது தலாக். இந்த தலாக் என்பதை எங்கள் பகுதியில் இந்த வார்த்தையை வாயால் சொல்லமாட்டார்கள். இதற்கு மாற்றாக யாரவது டைவர்ஸ் சொல்லிட்டால் வார்த்தை சொல்லிட்டாராம் என்பார்கள். ஏனென்றால் அது அவர்களின் வாழ்க்கையை பிரிக்கிறது. அதனால் இந்த சொல்லை பயன்படுத்தமாட்டார்கள்.

ஹலாரத்

இன்னும் சில பகுதிகளில் வெப்பத்திற்கு ஹலாரத் என்பார்கள். ”ரொம்ப ஹலாரத்தா இருக்கு அந்த Fan ஐ போடு என்பார்கள்

Leave a Comment