சென்னை மயிலாப்பூர் பகுதி தமிழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்று. இன்றைய நிலையிலிருந்து மாறுபட்ட வகையில், ஒரு காலத்தில் அங்கு பெரும்பாலும் முஸ்லீம் சமூகத்து மக்கள் வசித்து வந்தனர். அதாவது, 13ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மெட்ராசில் முஸ்லீம்கள் குடியேறினர். இதனை விவரிக்கும் ஒரு ஆவணப்படம் “மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள்” என்ர பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதனை திரு.அன்வர் என்பவர் இயக்கி வெளியிட்டுள்ளார்.
இத்தாலியின் வெனிஸ் நகரில் பிறந்து கடல் வழிப்பயணத்தை மேற்கொண்டு புதிய நாடுகளைத் தேடிச் சென்ர மார்க்கோபோலோ தனது பயனக்க்றிப்பில் அக்காலத்து மெட்ராஸ் குறித்த தகவல்களை குறிப்பிட்டிருக்கின்றார் என்பதை இந்த ஆவணப்படத்தை இயக்கிய திருஅன்வர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இதே போல போர்த்துக்கீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் இன்று மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் தாமஸ் கல்லறையை (சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள் தான் பாதுகாத்து பராமரித்து வந்தனர்.
சைதாப்பேட்டை பெயர் காரணம்
அதேபோல இன்று சைதாப்பேட்டை ஏணா அழைக்கப்படும் பகுதி முன்னர் சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.
சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து
அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்கு கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவே பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர். உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.
குறிப்புக்கள்