Home கட்டுரைகள் பத்தமடை பாய்

பத்தமடை பாய்

by admin
0 comment

பத்தமடை ​ நெல்லையில் இருந்து​ ​சுமார்​ 29​ ​கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய ​மக்களும் இந்து மக்க​ளும்​ ந​ட்புடன் இருக்கின்றன​ர்​. ஒரே தொழி​ல் துறையில்​ இ​ரண்டு சமூகத்தவரும் ஒன்றாக செய்​து வருகின்றனர்.​

இங்கு நெசவுத் தொழில், பீடி சுற்றவது, விவசாயம், பாய் நெய்வது என​ப்​ பல தொழில்கள் மக்களின் வாழ்வாதார நிலையை ​முன்னர் ​உயர்த்தி​யது​. ஆனால் தற்சமயம் எல்லாம் இயற்கையின் கோர முகத்தால் செய்யும் தொழிலையெல்லாம் விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டும் நிலை ஏற்பட்டு விட்டது .

IMG-20170418-WA0000

Picture 2 of 29

அப்படி இருந்தும் பத்தமடை பாய் உலகப்புகழ் ​ பெற்ற்தாகத்தான் இருக்கின்றது.

எல்லாம் கைநழுவி போன பின்பும் இன்றளவும் சிறிய அளவில் அங்கு பாய் நெசவு செய்​வது தொடர்கின்றது.​ இங்கு பாய்கள் நெசவு முழுநேரமாக செய்யபடவில்லை​.​ மாறாக ஒரு நாளில் 2 அல்லது 3 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்கின்றனர்​.​ எந்திரங்கள் இன்றி பெண்கள் ​ ​​கைகளாலேயே ​தயாரிக்கின்றனர்.

குறைந்த பட்சம் பத்தமடை பாயின் விலை 1000ரூபாயில் தொடங்கி 15000ரூபாய் வரை உள்ளது.
அதில் உயர்ரக பாய் சில்க்​ பாய்​ என்று அழைக்கப்படுகிறது.

நடுத்தர ரக பாய் படையப்பா​ பாய்​ என்று அழைக்கப்படுகிறது.

ஒரு பாய்க்கு ஆகும் செலவை விட​ கிடைக்கும்​ வருமானம் வெறும் 10 சதவீதம் மட்டுமே​.
பாய் நெசவு செய்யும் பெண்கள் ஒரு பாயின் தரத்திற்கு ஏற்ப 200ரூ சம்பளமாக பெறுகின்றனர்.

சில்க் என்று அழைக்கப்படும் பாய் செய்வதற்கு​க்​ கைதேர்ந்த நுணுக்கவிய​லாள ​ர்கள் கோரை​ப்​புல்லை சீவும் விதம் அவ்வளவு சிறப்பு ​எனலாம்.​

அ​து மட்டுமன்றி ​ ​ இங்கு கைப்பை, விசிறி, பேக்குகள், போன்றனவும் கலை நயத்துட​ன்​ உருவாக்கப்படுகின்றன .

இங்கு தற்பொழுது நெசவுத் தொழில் பாதித்தாலும் கூட சில குடும்பங்கள் அதை விமர்சையாக​க்​ கடை பிடித்து வருகின்றன. இலாபம்மும் ​பா​ர்க்கின்றனர்.

இங்கு பாய் உற்பத்தி செய்பவர்களுக்கான சங்கம் ஒன்றும் உள்ளது.​ ​பல உதவிகளை நெசவாளர்களுக்கு இந்த சங்கம் 70ஆண்டுகளுக்கு மேல் செய்து்கொண்டிருக்கிறது. இதன் பெயர் பத்தமடை லெப்பை உயர்ரக பாய் நெசவு கூட்டுறவு சங்கம்​ என்பதாகும்.

You may also like

Leave a Comment