மேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா மிகவும் பழைமையான மதரஸாவாக அவ்வூரில் கம்பீரமாக அமைந்துள்ளது.
இந்த மதரஸாவில் பல மக்கள் தங்களது பாரம்பரியமான தொழுகைகளை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த மக்கள் அனைவருக்கும் முன்பு நெசவுத்தொழில் பரம்பரை தொழிலாக இருந்து வந்தது. இப்பொழுது பீடி சுற்றுவது பிரதான தொழிலாக இருந்தாலும் வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டுவதும் இவர்களில் பெரும்பாலோர் செய்கின்றனர்.
இவ்வூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பல ஊர்களிலும் பெரும்பான்மையான மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்வது இங்கு வாடிக்கையாகவே உள்ளது.
இந்த மதரஸா மட்டுமின்றி இவ்வூரில் உள்ள பல மதரஸாக்களில் தனது முன்னோர்களை அடக்கம் செய்து வழிபட்டு வருகின்றனர் என்பதும் கூடதல் தகவல் .