மசூதியின் பெயர் : யாஹூசைனி மஸ்ஜித்
தர்காவின் பெயர் : யாஅப்பாஸ் தர்கா .
இடம்: பீட்டர்ஸ் ரோடு , ராயப்பேட்டை.
சென்னையில் பல்வேறு இனக்குழு மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழ்கின்ற இஸ்லாமிய மக்களில், இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவாஇந்தப் பிரிவினர் பெரும்பாலும் உருது பேசுபவர்களைப் பற்றி பேச விருப்பமற்று இருக்கின்றனர்.
இவர்கள் அவர்களிடம் இருந்து வேறுபட்ட பல சடங்கு முறைகளை மாற்றி தங்களை அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்ட விரும்புகின்றனர்.
இவர்களின் தொழுகை முறையும் சற்று வித்தியாச முறையில் தான் உள்ளது.
சென்னையில் இருக்ககூடிய ஷியா முஸ்லிம் மசூதிகள் பெரும்பாலும் தனியாகவே அமைந்திருக்கும். அதற்கு வித்ஹ்டியாசமாக இங்குள்ள தர்கா மற்றும் மசூதி இரண்டும் ஒரே வளாகத்தில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளன.
தர்காவிற்கு அப்பாஸ் தர்கா என்றும் மசூதிக்கு ஹுசைன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.
இந்த வளாகத்தின் அமைப்பே அரபு நாடுகளில் உள்ளது போல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தின் வெளியே ஷியா முஸ்லிம்களின் அலுவலகமும், மக்களுக்கான மருத்துவ முகாமும் தினந்தோறும் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பிரிவினரின் உடைகளும் ( பெண்கள் அணியும் பர்தா உடை ) அவர்கள் பேச்சு வழக்காறுகளும் அரபு மொழி முஸ்லிம்களை விட வித்தியாசவித்தியாசமாகவே உள்ளது