மேலப்பாளையம் கொத்பா பள்ளிவாசல். இதற்கு மீரா பள்ளிவாசல் என்ற பெயரும் வழக்கில் உள்ளது. இந்தப் பள்ளிவாசலில் பெரும்பாலும் அன்று முதல் இன்று வரை பெண்களிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலின் கல்லறை ஒன்று இன்றளவும் மிக பழமையானதாக இருக்கிறது.
170 வருட பாரம்பரியம் கொண்ட இந்தப் பள்ளிவாசல் நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டது. இதன் சுற்றுசுவர் மட்டும் நிர்மாணிக்கப்பட்டு 49 வருடங்கள் ஆகின்றது.
இந்தப் பள்ளிவாசலில் தற்சமயம் மதகுருக்கள் பிரிவு காரணமாக தொழுகைகள் நடைபெறுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குறிய தகவல் தான்.
நெல்லை பள்ளிவாசல்களில் முதன்மையானதாகத் திகழ்ந்த இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது பொலிவிழந்து காணப்படுகிறது.