மசூதியின் பெயர் : மஸ்ஜிதே முஹம்தியா
அமைந்திருக்கும் இடம் : காக்ரன் பேசின் சாலை
டாக்டர். அம்பேத்கர் நகர் 4வது தெரு கொருக்குப்பேட்டை சென்னை – 21
60வது ஆண்டில் அடியெடித்து வைக்கும் இம்மசூதி பல பாங்கு ஓதுவர்களை உருவாக்கி தமிழகமெங்கும் அவர்களைப் பாங்கு ஓத தயார் செய்து அனுப்பியுள்ளது.
இம்மசூதி வடசென்னையின் முக்கியமான பகுதியான கிழக்கில் காக்ரன் பேசின் சாலை டாக்டர்.அம்பேத்கர் நகர் 4வது தெருவில் அமைந்துள்ளது.
இம்மசூதியில் மாணவர்கள் அரபு மொழி கற்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
மாதம் ஒரு முறை இலவச மருத்துவ முகாம் இம்மசூதியின் காப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது .
முதல் மாடி மட்டும் 40ஆண்டுகளாக உள்ளது. 2 மற்றும் 3 வது மாடிகள் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது .
இத்தகைய மசூதியில் ஆண்டு தோறும் ரம்சான் நோம்புக்கு நோன்புக் கஞ்சி ஊற்றுவது இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது .
இங்கு மட்டுமல்ல தமிழகமெங்கும் அந்த நோம்பு கஞ்சி ஊற்றுவது மிக நேர்த்தியானதாக இருப்பதாக மிகச் சிறப்பாக அனைவராலும் பாராட்டப்படுகின்றது.
இவர்கள் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள அனைத்து மசூதி , தர்கா , மற்றும் முஸ்லீம் அறக்கட்டளைகள் அனைத்திலும் அரபு மொழியே இஸ்லாமியர்களின் மறை நூலான கூர்ஆன் ஓத பயன்படுத்துகின்றனர்.