கிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட பள்ளிவாசல் இது
1890 இறுதியில் முதல் கட்டமைப்பும் , 1940 மத்தியில் இரண்டாவது கட்டமைப்பும், 1983 இறுதி கட்டமைப்பும் பெற்று கம்பீரமாக இன்றளவும் உள்ளது
.
பள்ளிவாசல் இருக்கும் தெருவிற்கு 1942ல் காஜிமார் தெரு என்ற பெயரும் மக்களால் அழைக்கப்பட்டு நாளாடைவில் அப்பெயர் நிலையானதாக மாறி இன்றளவும் அப்படியே நிலைபெற்றுவிட்டது.
காஜிமார் பள்ளிவாசலின் கட்டமைப்பு ஒரு கோட்டையைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமாக இருக்கும் . இந்தப் பள்ளிவாசலில் அலுவலகத்தில் பல இந்துமக்களும் பணி புரிகின்றனர். இந்த பள்ளிவாசலில் இருக்கும் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் கிராமங்களுக்கு இலவசமாக தண்ணீர் தரப்படுகிறது
.மேலும் வயதான இசுலாமிய முதியோர்களுக்கு இந்த பள்ளிவாசல் சார்பில் மாதந்தோரும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இலவச நூலகமும் இந்தப்பள்ளிவாசலில் இன்றளவும் செயல்பட்டுகொண்டு வருகிறது.