மசூதியின் பெயர் : மதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன்அமைந்திருக்கும் இடம் : திருவல்லிக்கேணி இரயில் நிலையம் அருகில் உள்ள அயோத்தியா நகர் கட்ட தொட்டி தெரு.
35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இஸ்லாமிய மக்களின் வழிபாட்டில் உள்ள மசூதி இது. 90களின் போது ஏற்பட்ட மதக்கலவரத்தில் இந்த மசூதி முழுவதுமாக எரிக்கப்பட்டு விட்டது .
பின் 2000 தொடக்கத்தில் மீண்டும் ஒரு முறை இம்மசூதி கயவர்களால் சூறையாடப்பட்டுள்ளது. 2001 ஆண்டில் வடநாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி 7லட்சம் ரூபாயை மொத்தமாகக் கொடுத்து அதை முழுமையாக சீரமைத்துக் கட்டச் சொல்லி தன் பெயரை எதிலும் குறிப்பிட கூடாது என்று சொல்லிவிட்டு சென்றார் என்கிறார்கள் காப்பாளர்கள்.
இம்மசூதியில் ஆண்டுக்கு 3 மாணவர்கள் அரபு பயின்று விட்டு செல்கின்றனர் . இதுவரை 38 மாணவர்கள் அரபு மொழி கற்று வெளியில் சென்றுள்ளனர்.
பெண்களுக்கென்று தனி பிரார்த்தனை இடமும் இந்த மசூதியில் உள்ளது
மதர்ஸா -ஈ-தளிமுல் கூர்ஆன் – திருவல்லிக்கேணி
previous post