பத்தமடை நெல்லையில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய மக்களும் இந்து மக்களும் நட்புடன் இருக்கின்றனர். ஒரே தொழில் துறையில் இரண்டு சமூகத்தவரும் ஒன்றாக செய்து வருகின்றனர்.
இங்கு நெசவுத் தொழில், பீடி சுற்றவது, விவசாயம், பாய் நெய்வது எனப் பல தொழில்கள் மக்களின் வாழ்வாதார நிலையை முன்னர் உயர்த்தியது. ஆனால் தற்சமயம் எல்லாம் இயற்கையின் கோர முகத்தால் செய்யும் தொழிலையெல்லாம் விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டும் நிலை ஏற்பட்டு விட்டது .
அப்படி இருந்தும் பத்தமடை பாய் உலகப்புகழ் பெற்ற்தாகத்தான் இருக்கின்றது.
எல்லாம் கைநழுவி போன பின்பும் இன்றளவும் சிறிய அளவில் அங்கு பாய் நெசவு செய்வது தொடர்கின்றது. இங்கு பாய்கள் நெசவு முழுநேரமாக செய்யபடவில்லை. மாறாக ஒரு நாளில் 2 அல்லது 3 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். எந்திரங்கள் இன்றி பெண்கள் கைகளாலேயே தயாரிக்கின்றனர்.
குறைந்த பட்சம் பத்தமடை பாயின் விலை 1000ரூபாயில் தொடங்கி 15000ரூபாய் வரை உள்ளது.
அதில் உயர்ரக பாய் சில்க் பாய் என்று அழைக்கப்படுகிறது.
நடுத்தர ரக பாய் படையப்பா பாய் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு பாய்க்கு ஆகும் செலவை விட கிடைக்கும் வருமானம் வெறும் 10 சதவீதம் மட்டுமே.
பாய் நெசவு செய்யும் பெண்கள் ஒரு பாயின் தரத்திற்கு ஏற்ப 200ரூ சம்பளமாக பெறுகின்றனர்.
சில்க் என்று அழைக்கப்படும் பாய் செய்வதற்குக் கைதேர்ந்த நுணுக்கவியலாள ர்கள் கோரைப்புல்லை சீவும் விதம் அவ்வளவு சிறப்பு எனலாம்.
அது மட்டுமன்றி இங்கு கைப்பை, விசிறி, பேக்குகள், போன்றனவும் கலை நயத்துடன் உருவாக்கப்படுகின்றன .
இங்கு தற்பொழுது நெசவுத் தொழில் பாதித்தாலும் கூட சில குடும்பங்கள் அதை விமர்சையாகக் கடை பிடித்து வருகின்றன. இலாபம்மும் பார்க்கின்றனர்.
இங்கு பாய் உற்பத்தி செய்பவர்களுக்கான சங்கம் ஒன்றும் உள்ளது. பல உதவிகளை நெசவாளர்களுக்கு இந்த சங்கம் 70ஆண்டுகளுக்கு மேல் செய்து்கொண்டிருக்கிறது. இதன் பெயர் பத்தமடை லெப்பை உயர்ரக பாய் நெசவு கூட்டுறவு சங்கம் என்பதாகும்.