திருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும் அல்லவா, அதற்கு ஏற்றவாறு அமைந்த இந்த இடம் ஒரு காலத்தில் அறக்கட்டளையாக இருந்து பின் வீடாக மாறியுள்ளது.
திருநாள் நிலையத்தின் நிறுவனர் ஹகிம் அவர்கள் பர்மாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர். இங்கு அவர் வந்த பொழுது உடன் பாறையினால் செய்யப்பட்ட படுக்கை கட்டில்களையும் உடன் கொண்டு வந்திருக்கின்றார். அந்த கட்டில் அவரது சந்ததியினரால் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் பெண்களுக்கு படிப்பறிவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் தன் வீட்டிலேயே கல்வி புகட்டினார்.
ஐந்து தலைமுறைகள் கடந்தும் இந்த நிலையம் கம்பீரமாக மேலப்பாளையம் மைய தெருவில் அமைந்துள்ளது.
தற்சமயம் ஹகிம் அவர்களின் சந்ததியினர் கூட்டுக் குடும்பமாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பீடி சுற்றுவதைத் தொழிலாக செய்கின்றனர்.தற்சமயம் பொருளாதாரத்திற்காக கடின உழைப்பை அவர்கள் இரவும் பகலும் செய்கின்றனர்.