ஞானியார் அப்பா தர்கா
இடம்: மேலப்பாளையம் கிழக்கில் அமைந்துள்ளது..
ஞானியார் அப்பா தர்கா நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மிகவும் பிரபலமான ஒரு தர்கா.
இந்த தர்கா ஹகிம் அவர்களின் இடத்தில் தான் தற்சமயம் உள்ளது.அவர்கள் தான் முதலில் இந்த தர்காவை தொடங்கினார் . ஹகிம் அவர்களே இந்த தர்காவின் பெயரை சூட்டியிருக்கின்றார்.
இந்த தர்காவில் பல வெளியூர்களில் இருந்து வரும் கல்வி கற்க வாய்ப்பில்லா குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து இஸ்லாமிய பழக்க வழக்க முறைகள், எழுத்து முறையில் போன்றன கற்றுத்தரப்படுகின்றது.இதே தர்காவில் பெண்களுக்கான அரபு மொழி வகுப்பும் , பெண்களுக்கான சிறப்பு தொழுகைகளும் இங்கு நடைபெருகிறது.
இந்த தர்காவை தற்சமயம் நிர்வகிப்பர் முகமது துராப் என்பவராவார். அவர் 38 ஆண்டுகள் இந்த தர்காவை சீறும் சிறப்புமாக நிர்வகித்து வருகிறார் .
அத்துடன் கடந்த 6 ஆண்டுகளில் 35மாணவர்கள் அரபு பயின்று வெளியேறியுள்ளனர் என்பது கூடு தல் சிறப்பு . இந்த தர்காவில் எப்பொழுதும் ஒரு விளக்கு எறிந்து கொண்டே இருக்கிறது.
இந்த ஊரில் பல தர்காக்கள் இருந்தாலும் இந்த தர்கா தனித்துவத்துடன் விளங்குகிறது.