சிந்தா பள்ளிவாசல் அமைந்து இருக்கும் இடம் சுற்றிலும் இந்து மக்களே அதிகம் வசிக்கின்றனர். இந்த ப்பள்ளி வாசல் புதியது, பழையது என்று இரண்டாக உள்ளது . புதியது நிர்மாணிக்கப்பட்டு, பழைய பகுதி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள இந்தப்பள்ளிவாசல் மிகவும் சிறப்பு பெற்றது.
குழந்தை வரம் வேண்டி இங்கு வியாழன் அன்று தொழுகை முடிந்தவுடன் அவர்களுக்காகச் சிறப்பு பிரார்த்தனை செய்யவும் இங்கு உள்ள இசுலாமியர்கள் தயாராக உள்ளதால் இங்கு இந்து மக்கள் அதிகமாக வருகின்றனர். இந்த பள்ளிவாசலின் உள்ளே ஒரு கொடிமரம் வைக்கப்பட்டு, அதைச்சுற்றிலும் ஊதுவத்திகள், ஜவ்வாது போன்றவைகள் இறைவனுக்காகப் படைக்கப்படுகின்றன .
இங்குள்ள கொடிமரம், முன்னர் பர்மாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஏழு குடும்பங்களில் ஒரு குடும்பம் வந்த படகின் கொடிமரம்தான் என்கிறார் வழக்கறிஞர். திரு .எம்.எம்.தீன் அவர்கள் .
இந்தப் புதிய பள்ளிவாசலிலே எல்லா நிகழ்வுகளும் தொழுகைகளும் நடைபெறுகிறது. பழையபள்ளிவாசல் சிறப்பு பூஜை காலங்களில் மட்டும் திறக்கப்படுகிறது.