பெயர் : கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை. இடம் : டாக்டர். பெசன்ட் ரோடு திருவல்லிக்கேணி மார்கெட் இந்த மசூதி முதலில் பாடசாலையாக இருந்தது. பின்பு ஒரு அறக்கட்டளையாக மாறி இன்றளவும் இங்கு தொழுகை நடைபெற்று வருகிறது. இந்த அறக்கட்டளை 30 வருடங்களாக இங்கு செயல் பட்டு வருகிறது . இங்கு இருக்கும் இஸ்லாமிய மக்களை ஷியா முஸ்லிம் அல்லது போரா முஸ்லிம் என்றும் வகைப்படுத்துகின்றனர் .
இவர்கள் பர்மாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த கலப்பினத்தவர்கள் என அறியப்படுகின்றார்கள். இந்த அறக்கட்டளையை நிறுவியவர் திரு. சிராஜூதின்ஷா. இவரின் மனைவி இறந்த பின் அவரது நினைவாக அவரது பெயரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை தான் இது. முதலில் பாடசாலையாக இருந்து பின் அறக்கட்டளையாக மாற்றம் பெற்று இன்று பெண்கள் தொழுகை செய்யும் மிக முக்கியமான வழிபாட்டு இடமாக இந்த அறக்கட்டளை உள்ளது . இந்த அறக்கட்டளை வரும் சூன் மாதம் 5 தேதி தனது 30வது ஆண்டை நிறைவு செய்கிறது.