தர்காவின் பெயர்: உஜ்ரத் சையத் துராபுதீன்ஷா காதிரியுல் சிஸ்தி
அமைந்துள்ள இடம் வண்ணாரப்பேட்டை இரயில் நிலையம் அருகில்
அமைந்துள்ள இடம் வண்ணாரப்பேட்டை இரயில் நிலையம் அருகில்
இந்த தர்கா வட சென்னையின் மிக முக்கியமான பொதுமக்கள் அதிகம் தினசரி வந்து செல்லும் அரசு ஸ்டான்லி மருத்துவனையின் உள்ளே உள்ளது . இங்கு அதிகமாக மாந்தீரிகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வியாழன் அன்று வந்து செல்வது வழக்கமாகவும் உள்ளது . இந்த தர்காவில் மத பேதங்கள் ஏதுமின்றி மக்கள் வந்து செல்கின்றனர்.
பேய் ஓட்டுவது , குழந்தைகளுக்கு மந்தீரித்து தாயத்து கட்டுவது, நோயுற்றவர்களை மனரீதியாக உரிய சிகிச்சைக்குத் தயார் செய்து அனுப்புவது எனப் பல சேவைகள் இந்தத் தர்காவில் வாரந்தோறும் நடக்கின்றன.
இஸ்லாமிய மக்கள் மத்தியில் இந்தத் தர்கா தொடர்பில் மாற்றுக்கருத்தும் இருக்கின்றது. சில இஸ்லாமியர்கள் இந்தத் தர்காவை வெறுக்கவும் செய்கின்றனர். அவர்கள் ஏமாற்றுக்காரன்கள் என்றும் ஏலள னப்படுத்த படுகின்றனர். இருந்தாலும் வாரா வாரம் வியாழன் கூட்டம் அதிகமாகிக் கொண்டே தான் செல்கின்றது.