ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மசூதி மிகப் பிரபலமானது.
இந்த இடத்திற்கு ஆயிரம் விளக்கு எனப்பெயர் வர மிக முக்கிய காரணமே அப்பாஸி ஹசூர் கானா மசூதியால் தான். இந்த பெயர்தான் இம்மசூதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
400 ஆண்டுகள் பழமையானது எனக்கருதப்படும் இம்மசூதி, ஆற்காடு நவாப் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இம்மசூதியில் இருந்து நேராக எதிரே உள்ள சாலையின் பெயர் கீரிம்ஸ் சாலை அதன் நேரே சென்றால் தற்போதைய கல்விதுறை அமைச்சகம் அமைந்துள்ளது. இங்கு தான் முன்பு நவாப்பின் அரண்மனை இருந்தது . நவாப் அரண்மனையா காடு அமைந்திருப்பதால் அங்கு வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதனால் நவாப்பின் ஊர்மக்கள்
பாதிக்கப்பட்டதால் அரண்மனையைச் சுற்றி உள்ள கிராமத்தில் இருந்து மசூதிக்கு செல்லும் 2 ¹/² கிலோமீட்டருக்குச் சாலையின் இருபுறமும் விளக்குகள் அமைக்கப்பட்டன. அதன் மொத்த எண்ணிக்கை தான் பின்நாளில் ஆயிரம்விளக்கு என அழைக்கப்பட்டது.இன்றளவும் இந்த மசூதி மிக கம்பீரமாக நிற்கிறது சென்னையின் மையத்தில் குறைந்தது பண்டிகை காலத்தில் குறிப்பிட்ட மு இஸ்லாமிய மக்கள் மட்டுமே இந்த மசூதிக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.