Home மதுரை தக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு

தக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு

by admin
0 comment

இடம்: தக்கலை பீர்முகமது நினைவிடம்

இங்கு வருடாவருடம்​ பெரியவர்​ பீர்முகமது நினைவுநாளில் அவரின் ஞானப்புகழ்ச்சி பாடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியது.சுற்று வட்டாரத்தில் இருந்து மதவேறுபாடின்றி ​ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றன​ர்​.

மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் இறுதி நாளில் ஞானப்புகழ்சி​ பாடல்கள்​ பாடப்படுகி​ன்றன. மேலும் இந்த​ப்​ பாடல் ​ எட்டு மணி​நேரம் தொடர்ச்சியாக​ ஆறு பேர் கொண்ட குழு​வினால்​ சுழற்சி முறையில் இரவு ​ஒன்பது ​மணியளவில் தொடங்கி அடுத்தநாள் அதிகாலை ​நான்கு மணிக்கும் மேலாக பாடப்படுகிறது.

_MG_0454

Picture 1 of 20

இந்த ஞானப்புகழ்ச்சி​ பாடல்கள்​ முழுவதும் தமிழிலே பாடப்பட்டு வருகிற​ன்றது.

அத்துடன் அந்த நாளில் மக்கள் பெருமளவு தக்கலையை ஆக்கிரமித்து கோலாகல கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

அந்த ஞானப்புகழ்சியை​ப்​ பாடலாக​ப்​ பாடும் அனைவரும் பரம்பரை பரம்பரையாக பாடிவருகின்றனர்​. ​ அவர்கள் அனைவரும் 45​ ​வயதுக்கு​ம்​ மேலானவர்கள்​ என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டிற்கான வரலாற்றை​ப்​ பேசும்​ பெரியவர் பீர்முகது அவர்களின் ஞானப்புகழ்ச்சி கன்னியாகுமரி , நாகர்கோவில் நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள மக்களையெல்லாம் ஒன்று சேர்க்கும் வரலாற்று நினைவு நிகழ்​வாகும்.​

அந்த நினைவிடம் சுமார் 13ஏக்க​ர் நிலப்பரப்பில் அரண்மனை போன்ற கட்டமைப்பில் கம்பீரமாக தோற்றம் கொண்டுள்ளது. திருவிழா நாளான அந்த பத்து நாட்க​ளும்​ தக்கலையையே ஒரு கண்ணியத்துடன் காண​ப்படுகிறது.

You may also like

Leave a Comment