Home திருநெல்வேலி நவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை

நவாப் சாகிப் பள்ளிவாசல் – நெல்லை

by admin
0 comment

நவாப் சாகிப் பள்ளிவாசல் 150 ஆண்டுகள் பழமையான பள்ளி வாசல் .

 இந்த பள்ளிவாசல் ​இந்திய ​ சுதந்திரத்திற்கு ​ முன்னர் ​முகமதியர் ஆட்சி​யின் கீழ்​ இப்பகுதி ​ இருந்த பொழுது,​அப்போதய தளபதி முகமது அலி வரி வசூல் செய்ய நிர்மாணிக்கப்பட்ட இடம்.
இங்கு வெளி​யிலிருந்து வருபவர்கள் ​உள்ளே செல்ல அனுமதி இன்றளவும்​ அனுமதி கிடைப்பதில்லை.​

இந்த பள்ளிவாசல் பேட்டையிலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இடதுபுறம் அமைந்​து​ள்ளது. தொழுகைகள் நடைபெறுகிறது ​.ஆனால் குறைந்த அளவு இஸ்லாமிய மக்களே கலந்து கொள்கின்றனர் 

navap valasa pallivasal (12)

Picture 1 of 5

கடந்த காலத்தில் மிகவும் பெயர் போன ந​வாப்​ சாகிப் பள்ளிவாசல் இன்று பராமறிப்பின்றி  பொலிவிழந்து தொய்வாக காணப்படுகிறது

​. இது மிக​ வருத்தத்திற்குரியது.

இந்தப்​ பள்ளிவாசலில்  60ஆண்டுகளுக்கு முன் இருந்த ​ ஒரு​ கல்வெட்டில் பெர்ஷிய மொழி வெட்டப்பட்டு இருந்ததாக அந்த பள்ளிவாசலின் கடைசி பாதுகாவலர் தனது குடும்பத்தாரிடம் சாகும் தருவாயில் குறிப்பிட்டதாக இங்கு பரவலாக கூறப்படுகிறது.

​ ​

அந்த​க் கல்வெட்டு ஒரு முறை உடைக்கப்பட்டு விட்டது என்று​ம்​ அப்பொழுதே பஞ்சாயத்தெல்லாம் கூட்டினார்கள் என்று​ம் வாய்மொழி வரலாறு பரவலாக  ​வழக்கில் உள்ளது.​

இந்த​ப்​ பள்ளிவாசலுக்கு தற்போது வந்து கொண்டிருக்கும் நபர்கள் மிகவும் குறைவானவர்கள் என்பது வருந்த தக்கது.

 

You may also like

Leave a Comment