Home Uncategorized தமிழக முஸ்லீம் வரலாறு

தமிழக முஸ்லீம் வரலாறு

by admin
0 comment

நபிகள் நாயகம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இஸ்லாம் என்ற மார்க்கத்தை அரபு உலகத்தில் போதித்த காலத்தில், அவர்களிடத்தில் பயிற்சி பெற்ற தோழர்கள் நண்பர்கள் வியாபார நோக்கத்தோடு இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள், குறிப்பாக தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள் என்ற தகவல்கூட இருக்கிறது வரலாற்றில். அதனால் இந்தியாவைப் பொருத்தமட்டிலே முஸ்லீம்களின் வரலாறு என்பது மிகவும் பூர்வீகமானது. 1500 ஆண்டுகளை நீண்ட காலத்தை கொண்டிருக்கக்கூடிய வரலாறு.

பிறகு சிறிது காலம் போக போக முஸ்லீம்களின் ஆட்சியும் இந்தியாவில் நீண்ட காலம் இருந்திருக்கிறது.  சுமார் சரியாக இருக்குமானால் தொள்ளாயிரம் ஆண்டுகாலம், முஸ்லீம் மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்திருக்கிறார்கள்.. தமிழகத்திலும் ஆர்காடு நவாப் போன்றவர்கள், மற்றவர்களுடைய ஆட்சியும் தமிழகத்தில் நடந்திருக்கிறது. திப்பு சுல்தானுடைய மக்கள் எல்லாம் வேலூர் கோட்டைக்கு அருகில் இருக்கக்கூடிய மைதானத்திலே அடக்கத்தனம் அவர்களுக்கு இருக்கிறது.

இதையெல்லாம் காணக்கூடிய காலகட்டத்திலே 900 ஆண்டுகள் முஸ்லீம்களின் ஆட்சி நடந்திருக்கிறது. அதற்கு பிறகு சுமார் 400 ஆண்டுகாலம் ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்தது. அதன் பிறகு நாம் 1947-லிலே சுதந்திரத்தை அடைந்தோம். இன்றைக்கு பல கோடி மக்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள் 185 கோடி அதில் எப்படியும் கால் சதவீத மக்கள் முஸ்லீம்கள் இருக்கலாம். இன்னமும் சொல்லப் போனால் இந்தியாவிலே முஸ்லீம்கள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பரவலாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் தங்களுடைய வழிபாட்டை நிறைவேற்றிக்கொள்வதற்காக வேண்டி, பல இடங்களிலே பள்ளி வாசல்களை அவர்களே உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய பழைய காலத்து சின்னங்கள் நிறைய இருக்கின்றது. இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஏன் தலைநகர் டெல்லியில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை இருக்கக்கூடிய இடங்களில் பார்த்தால் முஸ்லீம்கள் வாழ்ந்ததற்கூடிய அடையாள சின்னங்கள் அழியாத சின்னங்களாக இன்னமும் நிலைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய முஸ்லீம்கள், குறிப்பாக நான் தமிழகத்தை குறிப்பிட விரும்புகிறேன். வசதி படைத்தவர்கள் தனியார் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

பள்ளிக்கூடங்களையும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், அதே போல மார்கத்தைக்கற்றுக் கொடுக்க சமயக் கல்லூரிகள் நிறைய நடக்கிறது. தமிழகத்தை பொருத்தமட்டிலே ஏராளமான அப்படிப்பட்ட கல்லூரிகள் நடந்து கொண்டிருக்கிறது அந்த கல்லூரிகளில் ஒன்றுதான் நான் சொல்லக் கூடிய வேலூரில் இருக்கக்கூடிய ஜாமியால் பாக்டியா டு சாலியாட் என்ற பல்கலைக் கழகத்திலே நான் படித்து உருவானேன். ஆக இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முஸ்லீம்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

அது மட்டுமல்ல பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்தாலும்கூட தமிழகத்தை பொருத்தமட்டிலே என்னால் சொல்ல முடியும், அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக இப்படி உறவு கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கல்வித்தரம், பொருளாதார நிலை, வாழ்க்கைச் சூழ்நிலை , அவர்களது கலாச்சாரம் இவைகளெல்லாம் நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் தொடர்ந்து நடைமுறைபடுத்திக்கொண்டு வருகிறார்கள்.

மவுலானா

You may also like

Leave a Comment