Home சொற்கள் அகராதி

சொற்கள் அகராதி

by admin

சொற்கள் அகராதி

அரபு வார்த்தைகளும், தமிழில் சாதாரணமாகப் பயன்படுத்தும், தமிழ் வார்த்தைகளை தமிழக முஸ்லீம்களின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வழக்கம் காலம் காலமாகத் தொடர்ந்துவருகிறது. அந்தச் சொற்களை  கீழே காணலாம்

[youtube url=”https://www.youtube.com/watch?v=nA0K9a4o7p8″ width=”500″ height=”300″]

மதுரை, நெல்லை பகுதி

தமிழ் முஸ்லிம்களின் வழக்குச் சொற்கள்

 

வரிசை

எண்

வழக்குச்சொல்

அரபி () உருது

பொருள்

மரபுவழி

1.

 

அலாமத்

அரபி

சண்டைச் சச்சரவு

’அழ்மத்’ என்பதன் மருவல்

2.

அஜாயிப்

அரபி

ஆச்சரியம்

’அஜிப்’ என்பதன் மருவல்

3.

ஆணம்

குழம்பு

4.

ஏனம்

அரபி

வீட்டுப் பாத்திரம்

’இனாஉ’ எனும் சொல்லின் மருவல்

5.

கலாகத்

அரபி

கலகம்

’ஹலாக்’ எனும் சொல்லின் மருவல்

6.

கர உள்ளி

தமிழ்

வெஞ்சனம்

தொட்டுக்கொள்ள கையிலிருக்கும் வெங்காயம்

7.

சாயா

அரபி & உர்து

தேநீர்

ஷாய்

8.

பசியாறல்

தமிழ்

உணவு உண்பது

பசியைத் தீர்த்தல்

9.

பவுஸ் காட்டல்

அரபி

பெருமையடித்தல்

’ஃபவ்ஸ்’ எனும் சொல்லின் மருவல்

10.

முஹல்லம்

அரபி

தெரு

’மஹல்லா’ என்பதன் மருவல்

11.

மேனத்

அரபி

நல்லது/சிறந்தது

’மஊனத்’ என்பதன் மருவல்

12.

வலது

அரபி

சாமர்த்தியம்

பிள்ளைபோல் தைரியமாக

13.

வலந்து

–     

பாத்திரம்

14.

வார்த்தை சொல்லல்

தமிழ்

விவாகரத்து

’தலாக்’ எனும் சொல்லை சொல்வது

15.

ஹராரத்

அரபி

கசகசப்பு

வெப்பம் வந்தால் கசகசவென இருக்கும்

16.

ஷர்பத்

அரபி

பானம்

குடிபானம்