Home மதுரை மண்ணின் குரல்- கோரிப்பாளையம் தர்கா, மதுரை

மண்ணின் குரல்- கோரிப்பாளையம் தர்கா, மதுரை

by admin
0 comment

மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: கோரிப்பாளையம் தர்கா, மதுரை

தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு தர்காவும், பள்ளிவாசலும் உள்ளன. இங்குள்ள தர்காவில் சுல்தான் அலாவுதீன் உதௌஜி அவர்களும், அவரது மருமகனான குத்புதீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தர்க்காவின் உட்புறம் நடைவழியில் உள்ள மதுரை நாயக்க மன்னன் வீரப்பநாயக்கர் காலக் கல்வெட்டு (கி.பி.1573) தில்லி ஒரு கோல் சுல்தானென்று குறிப்பிடுகின்றது. வாரங்கல் என்பது இக்கல்வெட்டில் ஒரு கோல் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களிடையே ஒரு கருத்தும் நிலவுகின்றது..

இப்பள்ளிவாசலுக்கு கூன் பாண்டியன் காலத்தில் 14 ஆயிரம் பொன் அளிக்கப்பட்டுள்ளதென்றும் அதனைக் கொண்டு ஆறு சிற்றூர்கள் வாங்கப்பட்டு இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது என்றும் வீரப்ப நாயக்கன் காலக்கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

பாண்டிய மன்னர்களுக்குத் தேவையான குதிரைகளை அரேபியாவிலிருந்து தருவித்த போது, குதிரை வணிகத்தை ஒட்டி அரேபிய நாட்டைச் சேர்ந்த இசுலாமியர் பலர் மதுரைக்கு வந்தனர் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகின்றது.

நன்றி: மாமதுரை – பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.

யூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=gYV0Ptg0ioA&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

You may also like

Leave a Comment