Home திருநெல்வேலி கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்

கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்

by admin
0 comment
தென்காசியில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த  கடையநல்லூர் பெரிய பள்ளி வாசல் .
 
கடையநல்லூர் இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருக்கும் தமிழகத்தின் ஒரு ஊர் இங்கு இருக்கும் இஸ்லாமிய மக்கள் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமலும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பல பண்பாட்டு வழக்காறுகளை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த ஊரில் மொத்தம் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் 12 தெருக்கள் உள்ளது. ஒரு தெருவில் குறைந்த 600 வீடுகள் உள்ளது.
 இந்த மக்களுக்காக இதே ஊரில் 4 பள்ளிவாசல் இருந்தாலும் அனைவரும் கட்டாயமாக இந்த பெரிய பள்ளிவாசலுக்கு செல்கின்றனர் .
 
பெரிய பள்ளிவாசல் இங்கு தொழுகைகளும் , சடங்குகளும் மட்டும் இல்லாது அரபு மொழி பாடசாலையும் அதில் பயிலும் 120 ஆதரவற்ற இஸ்லாமிய மாணவர்களும் இங்குதான் இருக்கின்றனர் .
 அவர்கள் பலரும் மிகவும் வருமைக்கோட்டுக்கு கீழே உள்ள இசுலாமிய குடும்பத்தின் சந்ததியினர்கள். 
 
 

kadaiyanallur (1)

Picture 1 of 12

இங்கு மதரஸா சாப்பாடு என்ற முறை ஒன்று உள்ளது. அதன் படி இங்கு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மூன்று வேலை உணவும் இந்த பள்ளிவாசலுக்கு வருகை தரும் குடும்பத்தினர்கள் கொடுத்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று.. 
 
  அத்துடன் இவர்களின் தமிழ் பேச்சு வழக்கு மிகவும் நேர்த்தியான உச்சரிப்புடன் கர்வமாக உள்ளது..இந்த கடையநல்லூரில் பொதுசுவர் முறை ஒன்றும் இருக்கிறது அதன் படி எந்த வீட்டாருக்கும் எந்த சுவரும் சொந்தமில்லை என்பது தான்…

You may also like

Leave a Comment